வாட்ஸ் அப்பில் வந்துள்ள 5 புதிய மாற்றங்கள்!
டேப்லெட்டில் வாட்ஸ் அப் அதன் வெர்ஷனை கொண்டுவர முடிவு செய்துள்ளது, இதன்மூலம் பீட்டா சோதனையாளர்கள் வாட்ஸ் அப் கணக்கை டேப்லெட்டில் பயன்படுத்தலாம். whatsapp for tablet ஐ புதிய இன்-ஆப் பேனர் மூலம் அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் முடிவெடுத்துள்ளது.
வாட்ஸ் அப்பில் குழு உரையாடல்களை ஒழுங்கமைக்க, சுற்றுப்புறம், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பணியிடங்கள் போன்ற பல கம்யூனிட்டிகளை ஒரே குடையின் கீழ் அமைக்கும் செயல்முறையை வாட்ஸ் அப் அனைவருக்கும் வழங்கவிருக்கிறது.
வாட்ஸ் அப் குழுவில் இன்-சாட் வாக்கெடுப்பு அறிமுகமாகிறது, வாக்கெடுப்பை உருவாக்கியவர் 12 விதமான ஆப்ஷன்களை அதில் வழங்கலாம், குழுவிலுள்ள உறுப்பினர்கள் எத்தனை ஆப்ஷன்களுக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
வாட்ஸ் அப் மூலம் செய்யப்படும் வீடியோ அழைப்பில் இனிமேல் 32 நபர்கள் வரை இணைந்து உரையாட முடியும், இதன்மூலம் பயனர்கள் பெரிய அளவிலான குழுக்களை உருவாக்கி உரையாட முடியும்.
வாட்ஸ் அப் குழுவில் இதுவரை 256 நபர்கள் மட்டுமே இருந்த நிலையில், பின்னர் அதன் வரம்பை 512 ஆக உயர்த்தியது. இப்போது வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டின்படி, மொத்தம் குழுக்களில் 1024 பேர் இருக்கலாம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.