நம்ப முடியாத சலுகைகள், அட்டகாச அம்சங்கள்: அசத்தும் Samsung Galaxy F62

Wed, 19 May 2021-9:36 pm,

Samsung Galaxy F62 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாடு தற்போது பிளிப்கார்ட்டில் ரூ .23,999 என்ற விலைக்கும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .25,999 என்ற விலைக்கும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளின் கீழ் ரூ .2,500 உடனடி கேஷ்பேக் மூலம் தொலைபேசியைப் பெறலாம். 

 

இது தவிர, பிளிப்கார்ட் ஸ்மார்ட் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், தொலைபேசியை ரூ .7,200 க்கு வாங்கலாம். இந்த சலுகை பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ கார்டில் செல்லுபடியாகும். ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு கொண்டு இந்த தொலைபேசியை வாங்கும்போது 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக்கும் கிடைக்கிறது. நீங்கள் நோ-காஸ்ட் EMI-ல் தொலைபேசியை வாங்க விரும்பினால், மாதத்திற்கு ரூ .4000 என்ற விலையில் இதை வாங்கிக்கொள்ளலாம். 

Samsung Galaxy F62-வில் 6.7 இன்ச் முழு எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. இதன் ரெசல்யூஷன் 2400 x 1080 பிக்சல்கள் கொண்டது. தொலைபேசியில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 பிராசசர் உள்ளது. கிராஃபிக்சுக்கு ஏ.ஆர்.எம் மாலி G76 MP12 உள்ளது. தொலைபேசியில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் ஸ்டோரேஜ் அளவை 1 டி.பி. வரை அதிகரிக்கலாம்.

 

Samsung Galaxy F62-வில் புகைப்படம் எடுப்பதற்கு குவாட் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் 64 மெகாபிக்சல் முதன்மை (Primary), 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்பி எடுக்க தொலைபேசியின் முன்பக்க பேனலில் பஞ்ச்-ஹோல் கட்-அவுட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

பவரைப் பொறுத்தவரை, இந்த தொலைபேசியில் 7000mAh திறன்கொண்ட சக்திவாய்ந்த வலுவான பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பிற்காக, தொலைபேசியில் புளூடூத், வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைபேசியின் பரிமாணங்கள் 76.3 x 163.9 x 9.5 மிமீ ஆகும். இதன் எடை 218 கிராமாக உள்ளது. இந்த தொலைபேசி இரட்டை சிம் சப்போர்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link