சிவ பெருமான் அருளை பெற குறுக்கு வழி, கடன் தீரும் - 4 டூ 6 சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க
சிவபெருமான் ஆசி இருந்தால் வாழ்க்கை மங்களகரமாக இருக்கும். நோய் நொடி பிரச்சனைகள் இல்லாமல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ முடியும். ஆனால் சிவன் அருள் கிடைப்பது தான் பெரிது. அவரின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் என ஏங்கிக்கிடப்பவர்கள் கோடி பேர். தன் வாழ்நாளையே சிவபெருமானுக்கு அர்பணித்து சிவனடியார்களாக வாழ்பவர்கள் பல்லாயிரம் பேர்.
அப்பேர்ப்பட்ட மகத்துவம் கொண்ட சிவபெருமான் எல்லோருக்கும் அருள் கொடுத்துவிடுவாரா என்றால் இல்லை. அவரவர் பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பவே வரத்தையும் அளந்து கொடுப்பார். ஆனால் அவரை மகிழ்ச்சிபடுத்திவிட்டால், வேண்டும் வரத்தை பெற்று எல்லையில்லா மகிழ்ச்சியும், பொன்னும் பொருளும் சிறக்க வாழலாம்.
ஆனால் அவரை எப்படி மகிழ்ச்சிபடுத்துவது என்பது தானே உங்களுக்குள் இருக்கும் கேள்வி. அதுக்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. சிவபெருமானின் அருளை பெற வேண்டும் என்றால் நந்தி வழிபாடு செய்யுங்கள். உங்கள் குரல் நேரடியாக சிவபெருமானிடம் கேட்பதற்குள், நந்தி பகவான் உங்களின் நிறை குறைகளையும், என்ன வரமெல்லாம் கொடுக்கலாம் என்பதையும் அவரிடம் சொல்லிவிடுவார்.
நந்தி பகவான் சொல்லிவிட்டால் வரம் கிடைப்பது உறுதி. அதனால் எல்லா சிவன் கோவில்களிலும் சிவ பெருமானை வழிபடுவதற்கு முன்பு நந்தியை வழிபட்ட பிறகே கோயிலுக்குள் அடியெடுத்து வைப்பார்கள். உங்களின் குரலுக்கு சீக்கிரம் வரம் கிடைக்கும்.
நந்தியை வழிபட்டாலே பழி, பாவம், சாபம், வறுமை, நோய் நோடி பிரச்சனைகள் எல்லாம் தீரும். அதற்காகவே எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷம் நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேகம் எல்லாம் நடைபெறும். அந்த நேரத்தில் நந்தியை வழிபடுவது சிறப்பாகும். அதாவது பிரதோஷ நாளில் 4 டூ 6 மணிக்கு இந்த சிறப்பு வழிபாடு நடக்கும். அதில் குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள்.
நந்தியை வழிபடும்போது எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். தடைகள் விலகும். கல்வி, திருமணம் போன்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மன அமைதி பெருகும். நந்தி பெருமானுக்கு பால், தயிர், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.