Upcoming Electric scooters: உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் சூப்பரான மின்சார ஸ்கூட்டர்கள்

Mon, 27 Sep 2021-6:55 pm,

ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் மின்சார வாகன சந்தையில் அறிமுகம் ஆகவுள்ளது. நிறுவனம் சமீபத்தில் தைவானைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பாளர் கோகோரோவுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டாவும் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது.இந்த மின்சார ஸ்கூட்டரின் வரம்பு மிகவும் நன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விரைவில் TVS Creon என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 100 கிமீ வரை இயங்க முடியும் என்று இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரைப் பற்றி சொல்லப்படுகிறது.

சுசுகி நிறுவனம், Suzuki Burgman-ன் மின்சார வாகன வகையான  Suzuki Burgman Electric-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்கூட்டர் 4G இணைப்புடன் அறிமுகம் செய்யப்படக்கூடும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link