August Releases : ஒரே மாதத்தில் ஒட்டுமொத்தமாக வெளியாகும் 10 புதுப்படங்கள்! முழு லிஸ்ட்..
நகுல் நடித்திருக்கும் ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம், வரும் ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் வரும் ஆகஸ்டு மாத ரிலீஸிற்கு தயாராகியிருக்கிறது. இதில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ராஜாகிளி:
தம்பி ராமையா-சமுத்திரகனி நடித்திருக்கும் படம், ராஜாகிளி. இந்த படம் ஆகஸ்டு மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரகு தாதா:
கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ரகுதாதா. இந்த படம் வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வெளியாவதாக கூறப்படுகிறது.
மெய்யழகன்:
கார்த்தி-அரவிந்த் சாமி நடித்திருக்கும் மெய்யழகன் படத்தின் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் அல்லது ஆகஸ்டு மாதத்திலேயே வெளியாகும் என கூறப்படுகிறது.
காதலிக்க நேரமில்லை:
ஜெயம் ரவி நடித்திருக்கும் படம், காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் அவருடன் இணைந்து நித்யா மேனன் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு மாதத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிட்லர்:
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ஹிட்லர். இந்த படத்தை தனா என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படம், ஆகஸ்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ப்ளடி பெக்கர்:
கவின் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ப்ளடி பெக்கர். இந்த படத்தில் கவின் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் ஆகஸ்டில் வெளியாகலாம்.
அந்தகன்:
பிரசாந்த் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் படம், அந்தகன். இந்த படம், தற்போது ஆகஸ்டு மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.