Uric Acid: இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகிவிட்டதா? பிரச்சனையை தீர்க்க வழிகள் இவை
சில நோய்கள், உணவுமுறை மற்றும் மரபியல் காரணிகள் ஆகியவை அதிக அளவு யூரிக் அமிலத்தை சுரக்கச் செய்யும். மது அருந்துவதைத் தவிர்ப்பது மற்றும் சில உணவுகள் மற்றும் பானங்களை கட்டுப்படுத்துவது அமிலம் சுரக்கும் அளவைக் குறைக்க உதவும்.
ரசாயனம் சேர்க்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அருந்துவதைவிட், இளநீர் போன்ற இயற்கையான பானங்கள் உடலில் அமிலச்சுரப்பைக் கட்டுப்படுத்தும்
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம், சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்யவும் யூரிக் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் நல்லது.
எலுமிச்சை ஜூஸ், பச்சை காய்கறிகளின் சாறு உட்பட இயற்கையான, சாறுகளை குடிப்பது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகின்றன
வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும் காரணிகளில் உடல் எடையும் ஒன்றாகும், எனவே உடல் எடை பராமரிப்பு என்பதும் யூரிக் அமில சுரப்புக்கு காரணமாகிறது
உடல் எடையை குறைக்க செய்யும் பல வழிமுறைகள், கீல்வாதத்தை உருவாக்கும் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும்
உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கீல்வாதம் மற்றும் அதிக யூரிக் அமில அளவுகளால் ஏற்படும் நோய்களை சீராக்குகின்றன
யோகா, தியானம் என பல்வேறு வழிகளில் செய்யும் உடற்பயிற்சியும் மன ஒருங்கிணைப்பும் யூரிக் அமில கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன
கீல்வாதத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கு மூலமான ப்யூரின்கள் உள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம் ஆகும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை