சுப தன்மை கொண்ட குருவின் அராஜகம்! வக்ரப் பெயர்ச்சியால் கவலையில் மூழ்கப் போகும் ராசிகள்
கிரகங்களின் உதய, அஸ்தமன நிலைகளும், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகிய நிகழ்வுகளும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் செப்டம்பர் நான்காம் தேதி நடைபெறும் குருப் பெயர்ச்சி சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது
நல்ல பலன்களை அளிக்கும் சுப கிரகம் குரு
மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், திருமணத்திற்கு, குரு எங்கு இருக்கிறார் என்பது முக்கியமானது. குரு பார்வை சாதகமாக இருந்தால், சந்தோசமாக வாழலாம்
ஆனால், அதுவே, ஒருவரின் ஜாதகத்தில் குரு நீச்சமடைந்தால், அவர் அராஜக பலன்களைக் கொடுப்பார்
குரு கொடுத்தால் கோடி நன்மை என்றால், அவர் கெடுத்தால்? கொஞ்சம் கவனமாக இருந்தால், ஆசுவாசம் கிடைக்கும்
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றாலும், நாம் நினைத்தது நடக்கவில்லையே என்ற கவலை இருக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை புரிய வைப்பார் குரு பகவான்
குரு பகவானின் வக்ர போக்கினால் செப்டம்பர் நான்காம் தேதியில் இருந்து மகர ராசிக்காரர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்
குருவின் வக்ர பெயர்ச்சியால் அவ்வப்போது நன்மைகள் நடைபெற்றாலும், மனதில் அமைதியின்மை, மனக்குழப்பத்தால் கடக ராசியினர் கவலைபட வேண்டியிருக்கும். பணிகளில் கவனம் தேவை. மனதில் விரக்தி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை