சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி! அனுஷ சுக்கிரனால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்!
சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்வார், அதேபோல, அவர் அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார். இன்பம், அன்பு, பாசம், காதல் என மனித வாழ்க்கையில் இன்பங்கள் அனைத்தையும் அளிக்கும் சுக போகங்களின் அதிபதி சுக்கிரன் ஆவார்.
வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கானது. சுக்கிரன் என்றாலே பிரகாசமானவராக இருப்பார். சுக்கிரன் வலுத்து இருப்பவர்கள், ஈர்க்கும் தோற்றத்துடன் இருப்பார்கள்
சுக்கிரன், விசாக நட்சத்திரத்தில் இருந்து இன்று அனுசம் நட்சத்திரத்திற்கு மாறியதால், அதிர்ஷ்டத்தால் துள்ளி குதிக்கப் போகும் ராசிகள் எவை என்பதைப் பார்ப்போம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் மிகவும் நல்லதாக இருக்கும். வாழ்க்கையில் ஆசைப்பட்ட விஷயக்களில் பலவற்றை அடையலாம் என்ற தெம்பு ஏற்படுத்தும் பெயர்ச்சியாக இது இருக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் விரும்பியதை எல்லாம் வாங்கி அனுபவிக்கும் யோகத்தைக் கொடுக்கும். உணவு முதல் பானங்கள் வரை வேண்டியதெல்லாம் அனுபவித்து மகிழ்வீர்கள்
துலாம் ராசியினரின் வாழ்க்கையில் சுக்கிரன் தற்போது மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார். இந்த ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் என்றென்றும் மறக்க முடியாத அனுபவங்களை கொண்டு வந்து சேர்க்கும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் பொன் பொருள் சேர்க்கைக்கான காலமாக இருக்கும், சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். மனதிலுள்ள கவலைகள் தீரும் சமயம் இது
மிதுன ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிம்மதியும் ஆசுவாசமும் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான திட்டங்களை தீட்டலாம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அனுசத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் புகழையும் பிரபலமாகும் யோகத்தையும் கொடுக்கும். நிம்மதியும் மகிழ்ச்சியும் வாழ்க்கையை வசந்தமாக்கும்
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது