மீனத்தில் சுக்கிரன் - ராகு... 2025 புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கு
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்ரமான வாழ்க்கை, செல்வம், சுகம், மகிழ்ச்சி, அறிவாற்றல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் கிரகம், 2025 ஜனவரி 28ம் தேதி மீன ராசியில் நுழைய இருக்கிறார். ராகு கிரகம் ஏற்கனவே மீனத்தில் உள்ள நிலையில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை இருக்கப் போகிறது.
சுக்கிரனுடன் ராகு இணைவதால் ராகுவின் தோஷம் வெகுவாகக் குறையும் என்பது ஐதீகம். இதற்குக் காரணம், சுக்கிரனை அசுரர்களின் குரு என்றும், ராகு சுக்கிரனின் சீடனாகக் கருதப்படுவதேயாகும். இரண்டு நட்பு கிரகம் என்பதால், கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் பிறக்கும்.
மீனத்தில், ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகபட்ச பலன்கள் கிடைக்கும் என்றும் ராஜயோக பலன்களை அனுபவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர் ஜோதிடர்கள்.
ராகுவினால் ஏற்பட்டு வந்த பாதிப்புகள் நீங்கி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும். நிதி நிலைமை மேம்படும். பண வரவு அதிகமாகும். சுக்கிரன் - ராகு இணைவினால் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகளைப் பற்றி விரிவாக அறிந்து காணலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் புத்தாண்டில், பிரச்சனைகள் நீங்கி, உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் கண்ட கனவுகள் படிப்படியாக நனவாகும். சமூகப் பணியில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும், அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பழைய முதலீட்டின் மூலம் திடீரென்று பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். இதனால் நிதி நிலை மேம்படும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல நல்ல செய்திகளைத் தரும். மேலதிகாரி அவர்களின் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பார். வேலையில் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான கவலைகள் நீங்கும். நீங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவீர்கள் மற்றும் வெளியூர் பயணத்தைத் திட்டமிடலாம்.
விருச்சிகம்: சுக்கிரன்-ராகு இணைவதால் 2025 புத்தாண்டில் நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலைமை மேம்படும், வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பீர்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உண்டு. புதிய வேலை தேடுபவர்களின் முயற்சி வெற்றியடையும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.