இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மாக அதிர்ஷ்டம், பண அலை, உச்ச ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையே

Wed, 14 Aug 2024-10:27 am,

ரிஷபம் மற்றும் துலாம் ராசியை அதிபதியாக கொண்ட சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 25 அதிகாலை 01:24 மணிக்கு கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுவை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்கு நிதி ஆதாயம், அதிர்ஷ்டம், பதவி உயர்வு கிடைக்கும். 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி அடையப் போவதால் நல்ல மரியாதை கிடைக்கும். நண்பர்கள் அல்லது குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மரியாதை அதிகரிக்கும். புகழ் அதிகரிக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல்வேறு வழிகளில் பணம் வரும். குடும்பத்தில் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி அலை பெருகும். பணியிடத்திலும் சாதகமான சூழல் நிலவும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன் கிடைக்கும். திருமண வைபோகம் நடைபெறும். வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெறலாம். தொழில் ரீதியாகவும் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றி பெறலாம். புதிய தொழில் தொடங்கலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன் தரும். வெளிநாடு செல்லலாம். பணியிடத்தில் பாராட்டுகளை பெறலாம். பயணம் செல்லலாம். தொழிலில் புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம்.

விருச்சிகம்: சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்கள் உண்டாகும். நிதி நிலை வலுப்பெறும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். கடின உழைப்பால் வெற்றி பெறலாம். நண்பர்களின் முழு ஆதரவை பெறலாம். திருமணம் நடைபெறலாம். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

 

தனுசு: சுக்கிரனின் பெயர்ச்சி கன்னி ராசியில் நடக்கப் போவது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்கள பலனைத் தரப் போகிறது. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறக் கூடும். வெளியூர் பயணம் செல்லலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

சுக்கிர யோகத்தை பெற, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link