Vi recharge plans: புதிய குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்
Best Recharge Plans: அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் அழைப்புகள் மற்றும் தரவுகள் மட்டுமல்லாமல், இன்னும் அதிக வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் நிறுவனங்கள் திட்டங்களை வடிவமைக்கின்றன.
Vodafone Idea: இந்த வரிசையில், வோடபோன் ஐடியா (Vodafone Idea) தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் (Prepaid Plans) திட்டங்களை அறிவித்துள்ளது. அவை ரூ.99 மற்றும் ரூ.109 ஆகும். இந்த திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
ரூ.99 திட்டம்: இதில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையுடன் வருகிறது. குரல் அழைப்பு நன்மையுடன் சேர்த்து பயனர்கள் 1 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும திட்டத்துடன் பெறுகிறார்கள். செல்லுபடியாகும் காலம் 18 நாட்கள். இந்த திட்டத்தில் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடையாது.
ரூ.109 திட்டம்: இதில் பயனர்களுக்கு ரூ.99 திட்டத்தின் அதே நன்மைகளை வழங்குகிறது. அதாவது 1 ஜிபி அளவிலான மொத்த டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு போன்றவைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதிலும் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடையாது.