G.O.A.T: விஜய்யால் தமிழ் சினிமாவிற்கு இத்தனை கோடிகள் இழப்பா?
)
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற அவரது புதிய கட்சியை அறிவித்தார், மேலும் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
)
தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவரது கடைசி படமாக தளபதி 69 படத்தின் நடிக்க உள்ளார்.
)
இந்நிலையில் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் கோலிவுட்டிற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் கடைசி படமான லியோ கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்தது.
விஜய்யின் படங்கள் திரையரங்கை தாண்டி ஓடிடி, தொலைக்காட்சி என அனைத்து இடங்களிலும் சாதனை படைத்து வருகிறது. விஜய் ஒரு வருடத்திற்கு இரண்டு படங்கள் வீதம் நடித்து வருகிறார்.
விஜய்யின் படங்கள் வெளிவராமல் போனால் தமிழ் சினிமாவிற்கு ஒரு வருடத்திற்கு 1000 முதல் 1200 கோடிகள் வரை இழப்பு ஏற்படும் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.