விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
சித்தார்த் மல்லையா தனது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சித்தார்த்தும் ஜாஸ்மினும் நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறி உள்ளனர். தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
நடிகர் மற்றும் மாடலாக இருந்த விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் சமீபத்தில் ஒரு புத்தகத்தை எழுதி இருந்தார். சிறுவர்களுக்காக எழுதப்பட்டு இருந்த இந்த புத்தகத்தில் அவருடைய எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
"முடிந்தவரை நிறைய குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் இந்த புத்தகத்தை எழுதினேன், எனவே இதை வாங்கிய அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்து இருந்தார்.
சித்தார்த் மல்லையா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர். லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வளர்ந்த இவர் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார்.