விஜய்யின் தளபதி 68 படத்தின் கதை இதுதானா? அப்செட்டான ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'லியோ' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கப்போகும் 'தளபதி 68' படத்தில் நடிக்கவிருக்கிறார்.
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் 'தளபதி 68' படத்தை தயாரிக்க, சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.
'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர் என்கிற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார்.
'தளபதி 68' படம் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள ஈகோவை பற்றிய படம் என்று சில செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படமும் இதே கதைக்களத்தில் தான் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த 'வாரிசு' படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், மீண்டும் இதேபோன்ற கதையுள்ள படத்தில் விஜய் நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகளால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.