விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை தகவல்!
)
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் நிலை தற்போது மோசம் அடைந்துள்ளதாக மருத்துவமனை கூறி உள்ளது.
)
கடந்த நவம்பர் 18 ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்.
)
முதலில் விஜயகாந்த் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தற்போது மோசமடைந்துள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மோசமாகி உள்ளதாகவும், நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பொதுமக்கள் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.