In Pics: கடலில் மூழ்கிய ஹாங்காங்கின் பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் ஜம்போ

Wed, 22 Jun 2022-6:11 pm,

ஹாங்காங்கின் பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் Jumbo: ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. 

கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு: கொரோனா உலலெங்கிலும் சுற்றுலா துறை, ஹோட்டல் துறை, போக்குவரத்து துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டலும், இந்த பாதிப்பில் இருந்து தப்ப இயலவில்லை.

கடும் நிதி நெருக்கடி: கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் 2020 ஆம் ஆண்டு உணவகத்தை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேலை இழந்தனர். பராமரிப்பு செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் ஹோட்டலை ஹாங்காங்கில் கடந்த 14 ஆம் தேதி இந்த மிதக்கும் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

தென் சீன கடலில் மூழ்கிய உணவகம்: தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது ஜம்போ தண்ணீரில் மூழ்க தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது.

சீன அரண்மனையை ஒத்த தோற்றம்: ஜம்போ மிதக்கும் ஹோட்டல், தோற்றத்தில், சீன அரண்மனையை ஒத்திருந்தது. டாம் குரூஸ் மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணி போன்ற உலகளாவிய பிரபலங்களும் ஆளுமைகளும் அங்கு உணவருந்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link