குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்ற விராட் கோலி; கியூட் புகைப்படங்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு சென்றார்.
அங்கு பாபா நீம் கரோலியின் ஸ்தலத்தை பார்வையிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஆசிரமத்தில் இருந்த அவர்கள் பாபா நீம் கரோலியின் ஆசி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, தம்பதிகள் மா ஆனந்தமதி ஆசிரமத்திற்கு புறப்பட்டனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் உத்தரக்காண்டில் உள்ள குமாவோனில் உள்ள கைஞ்சி தாமுக்குச் சென்றனர். அது பாபா நீம் கரோலியின் மற்றொரு கோவில்.