மனைவி மீது தீரா காதல் கொண்ட விராட்..வைரலாகும் கிரிக்கெட் நாயகனின் பதிவு
)
பாலிவுட் நடிகையும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவிற்கு பிறந்தநாள் இன்று.
)
அனுஷ்காவிற்கு அவரது ரசிகர்கள்-பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
)
அனுஷ்காவின் அன்பு கணவர் விராட் கோலியும் தனது மனைவிக்காக ஸ்பெஷலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விராட், தனது பதிவில் அனுஷ்காவின் அழகான போட்டோக்கள் சிலவற்றை இணைத்துள்ளார்.
அனுஷ்காவின் புகைப்படங்களுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் விராட் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "என்னுடைய எல்லாமவளுக்கு பிறந்தநாள்.." என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ்காவின் புகைப்படங்களும் விராட்டின் இந்த பதிவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.