35 வயதிலும் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கும் விராட் கோலி..ரகசியம் இதுதான்!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவரை ரசிகர்கள் பலர், செல்லமாக ‘ரன் மெஷின்’ என்று அழைப்பதுண்டு. தனது அணியை வெற்றி பாதைக்கு எடுத்து செல்லும் வீரர்களுள் இவர் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருப்பார். விராட் கோலியை ரன்-அவுட் செய்வது எதிரணியினருக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு வேகமாக ஓடும் திறன் கொண்டவர் இவர்.
விராட் கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. இந்த வயதிலும் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக, 25 வயது இளைஞனின் உடல் போல வைத்துள்ளார். இதற்காக அவர் பிரத்யேக டயட்டையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகிறார். 30களை தாண்டியவர்கள் இவரை போல கட்டுமஸ்தான உடல் வேண்டும் என விரும்புவதுண்டு. அந்த சீக்ரெட்டை தெரிந்து கொள்வோமா?
விராட் கோலி, தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை. HIIT வர்க் அவுட் எனப்படும் உடற்பயிற்சிகளை பின்பற்றி, தனது தசைகளை வளர்ப்பதிலும், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்துபவர் கோலி. ப்ளாங்க், க்ரஞ், கால்களுக்கான உடற்பயிற்சி உள்ளிட்டவையும் இந்த HIIT வர்க் அவுட்டில் அடங்கும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஹெல்தியான டயட் மிகவும் முக்கியம். இதையும் மறக்காமல் பின்பற்றுபவர், விராட். அவரது டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
கோலி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். குறைவான புரதங்கள் நிறைந்த உணவுகளையும், பழங்கள், காய்கறிகளையும் உட்கொள்கிறார். இவரது உடற்பயிற்சிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கும் வகையில் உள்ளது.
விராட் கோலியின் இளமைக்கும், அவரது கட்டுமஸ்தான உடலுக்கு சரியான வாழ்க்கை முறையும் பெரிய காரணமாக அமைந்துள்ளது. தினசரி உடற்பயிற்சி மட்டுமன்றி, தனது உடலுக்கு ஏற்ற நேரம் உறங்குவது, தசைகளுக்கு தேவையான ஓய்வு கொடுப்பது போன்ற நடவடிக்கைகளையும் இவர் மேற்கொள்கிறார்.
உடல் நலனை பேணிக்காப்பதில், மன நலனும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நம்புபவர், விராட் கோலி. அதே போல, தனது மன நல பிரச்சனைகள் பற்றியும் வெளியுலகிற்கு சொல்ல அவர் தயங்குவதில்லை. விராட், தனது உடல் நலனில் கவனம் செலுத்துவது போலவே, மன நலனிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். இதுவும் இவரது இளமைக்கான ஒரு காரணமாக உள்ளது.