விராட் கோலி: ரெக்கார்ட பாருங்க.. தென்னாப்பிரிக்காவில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கை
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடக்கிறது.
இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் மட்டுமே பேட்டிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் 38, 76 ரன்கள் எடுத்து, இந்திய அணி வீரர்களில் அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இதே நிலையே நீடிக்கிறது. அவர் விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்கு ஸ்கோர் என்ற நிலை இருக்கிறது. அவரை தவிர மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.
தென்னாப்பிரிக்க மண்ணில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 51.7 தொட்டிருக்கிறது. அவரின் பேட்டிங் மட்டும் இல்லையென்றால் இந்திய அணியின் பேட்டிங் இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
இரண்டாவது இன்னிங்ஸிலாவது அவருக்கு இணையாக கேப்டன் ரோகித் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங் செய்தால் மட்டுமே இந்திய அணி 2வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முடியும்.