எலும்பு பாதிப்பு முதல் ரத்த சோகை வரை... விட்டமின் சி குறைபாட்டை அலட்சியம் செய்யாதீங்க!
எலும்பு ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியம் வரை, வைட்டமின் சி ஊட்டச்சத்து மிகவும் முக்கியமாகும். இந்நிலையில், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை அறிந்து கொள்ளலாம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமல்ல, வைட்டமின் சி யும் மிக அவசியம். எனவே இந்த குறைபாட்டின் மூலம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடலில் ரத்த அணுக்கள் குறைவாக இருக்கும் பிரச்சனையை ரத்தசோகை என்கிறோம். உடல் இரும்பு சக்தியை கிரகித்துக் கொள்வதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். மேலும் சிவப்பணுக்களை உருவாக்கவும் வைட்டமின் சி உதவுகிறது.
வைட்டமின் சி குறைபாட்டின் காரணமாக, சருமம் வறண்டு சுருக்கங்கள் தோன்றும். சருமத்திற்கு ஆக்ஸிஜன் ஏற்றியாக ஊட்டத்தை அழிக்கும் வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், சரும ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும்.
கண் பார்வை கூர்மைக்கும் வைட்டமின் சி மிகவும் முக்கியம். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி குறைபாடு காரணமாக கண்புரை போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
வைட்டமின் சி குறைபாடு ஏற்படாமல் இருக்க, எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.