எக்கச்சக்க ஓடிடிகள் இலவசம்... ஒரே பிளானில் ஓஹோனு ஆப்பர்... வெறும் 248 ரூபாய் தான்!
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனமும் கடும் போட்டியை அளிக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் ஓடிடி பிரியர்களுக்காக தற்போது புதிய பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஓடிடி பலன்கள் மட்டுமின்றி டேட்டா பலன்களையும் அளிக்கிறது. அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காயை அளிக்கலாம்.
248 ரூபாய்க்கு இந்த பிளானை வோடபோன் ஐடியா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 1 மாதமாகும். இருப்பினும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திட்டமாகும்.
இந்த டேட்டா பிளானில் மொத்தம் 6ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், Vi Movies & TV (MTV) Pro சந்தாவும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 202 ஆகும். அதாவது ஓடிடி 202 ரூபாய், டேட்டாவுக்கு 46 ரூபாய் ஆகும்.
இதில் உங்களுக்கு SonyLIV, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், FanCode, Klikk, Manorama Max, Chaupal, Playflix, Nammaflix, Distro TV, Shemaroo Me, Hungama, YuppTV, NexGTV and Pocket Films ஆகிய ஓடிடிகள் இலவசமாக கிடைக்கும்.
இந்த ஓடிடிகளை நீங்கள் மொபைலிலும், டிவியிலும் பார்க்கலாம். மேலும், இந்த பிளானில் 400 டிவி சேனல்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் சந்தாவும் இலவசமாகும்.
இது டேட்டா Addon பிளான் ஆகும். இதனை நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் உங்களிடம் அடிப்படை பிளான் இருக்க வேண்டும்.
இந்த 248 ரூபாய் பிளானில் டேட்டா பலன்கள் இருக்கிறதே தவிர காலிங் வசதியோ அல்லது எஸ்எம்எஸ் வசதியோ இதற்கு கிடையாது.