Volcanic Eruption ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம், 4 வாரங்களில் 40,000 நிலநடுக்கங்கள்
தலைநகர் ரெய்காவிக் (Reykjavik) அருகே ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியத்தில் எரிமலை வெடிப்பு தொடங்கியுள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகரிலிருந்து குறைந்தது 30 கிலோமீட்டர் ) தொலைவில் அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உல்ள ஃபாக்ராடல்ஸ்ஃப்ஜால் மலையின் அருகே எரிமலை வெடித்துச் சிதறியது.
(Photograph:AFP)
எரிமலை வெடிப்பு தொடர்பான ஹெலிகாப்டர் காட்சிகளை ஐஸ்லாந்திய வானிலை ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ளது (Icelandic Meteorological Office (IMO)). எரிமலைக்குழம்பு மட்டுமல்ல, மாக்மா (magma)வும் அங்கு அதிகமாக பரவுவதைக் காணலாம்.
(Photograph:AFP)
கடந்த நான்கு வாரங்களில், தீபகற்பத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் பதிவாகியுள்ளன, இது 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் பதிவுசெய்யப்பட்ட 1,000-3,000 என்ற பூகம்பங்கங்களை விட பல மடங்கு அதிகம் என்பது கவலையளிக்கும் விஷயம்.
(Photograph:AFP)
இந்த வெடிப்பு கிரிண்டவிக் மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும் IMO கூறியது.
(Photograph:AFP)
2010 ஆம் ஆண்டில் ஒரு எரிமலை வெடித்தது. அப்போது 900,000 விமானங்கள் நிறுத்தப்பட்டது, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் தற்போதைய எரிமலை வெடிப்பினால் வளிமண்டலத்தில் சாம்பல் அல்லது புகை அதிக அளவு பரவாது.
(Photograph:AFP)
எரிமலை வெடிப்பிற்கு பிறகும் ரெய்காவிக்கின் Keflavik சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. ஆனால் விமான சேவையை தொடரலாமா என்னும் முடிவை விமான நிறுவனங்களே எடுத்துக் கொள்ளலாம்.
(Photograph:AFP)