உடலில் அதிக சர்க்கரை இருப்பதை எச்சரிக்கும் அறிகுறிகள்!
)
உணவு சாப்பிட்ட 1 அல்லது 2 மணி நேரத்திற்கு பின்னர் சர்க்கரையின் அளவு 180 இருந்தாலோ, உணவு சாப்பிடுவதற்கு முன்னர் கிட்டத்தட்ட 8 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் 100-125 வரை சர்க்கரை அளவு இருந்தால் உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.
)
பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை, சிலருக்கு அதிக தாகம் எடுப்பதும் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதின் அறிகுறியாகும்.
)
உங்கள் உடலிலிருந்து அதிகப்படியான சிறுநீர் வெளியேறி உடல் டீஹைட்ரேட் ஆவதும் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதன் எச்சரிக்கையாகும்.
திடீரென்று உடல் எடை குறைந்து மெலிதான தோற்றம் அடைவது உடலில் ரத்த சர்க்கரை அதிகரித்திருப்பதால் அறிகுறியாகும்.
ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் கண் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை திறனில் குறைப்பது ஏற்படும்.
கால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால், விரல்கள் போன்றவற்றில் உணர்வில்லாமை அல்லது கூச்ச உணர்வு ஏற்படும்.