ஜனவரி முதல் இந்த மாடல் சாம்சங் போன்களில் WhatsApp வேலை செய்யாது!
தற்போது டிஜிட்டல் காலத்தில் தினசரி பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆப்பாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. அலுவலக வேலை முதல் சொந்த வேலை வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.
வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தை கொண்டு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இதனால் சில பழைய மாடல் போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது.
பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் என சில மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அவர்கள் தங்கள் போன்களை மாற்ற வேண்டி இருக்கும்.
பின்வரும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு முதல் வேலை செய்யாது. எனவே இந்த மாடல் போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த மொபைலை மாற்ற வேண்டி இருக்கும்.
இந்த மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது
Samsung
Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini,
HTC
One X, One X+, Desire 500, Desire 601
Sony
Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V
LG
Optimus G, Nexus 4, G2 Mini, L90
Motorola
Moto G, Razr HD, Moto E 2014
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கு மட்டுமின்றி ஐபோன் பயனர்களுக்கு இதே எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே பழைய ஐபோனை இன்னும் பயன்படுத்தி வந்தால் அவற்றை மாற்றுவது நல்லது.