மருக்கள் பிரச்சனை பாடாய் படுத்துதா? இதை செய்தால் உடனடி நிவாரணம்
கழுத்தில் உள்ள மருக்கள் பிரச்சனையை நீக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். இந்த பதிவில் இந்த வீட்டு வைத்தியங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கழுத்தில் உள்ள மருக்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தடவி ஒரு துணியால் கட்டவும். சிறிது நேரம் கழித்து வாழைப்பழத் தோலை அகற்றவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து மருக்கள் உதிர்ந்து காணப்படும்.
ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துவதன் மூலமும் கழுத்தில் உள்ள மருக்கள் பிரச்சனையை சமாளிக்கலாம். ஒரு காட்டன் துணியில் சில துளிகள் ஆப்பிள் வினிகரை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து உங்கள் தோலை சுத்தம் செய்யவும். சில நாட்களுக்குப் பிறகு, மருக்கள் தானாகவே காய்ந்துவிடும்.
கழுத்துப் பகுதியில் உள்ள மருக்களை நீக்க பூண்டையும் பயன்படுத்தலாம். பூண்டு விழுதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் மருக்கள் விரைவில் மறைந்துவிடும். பாதிக்கப்பட்ட பகுதியில் பூண்டு விழுதை தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் விரைவில் விழுவதைக் காணலாம். இதை வாரத்திற்கு 2 முறை மட்டுமே செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.