Rich Women List: இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியல்: ரோஷ்னி நாடார்

Sun, 21 Aug 2022-1:18 pm,

HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, இவரின் சொத்து 2021 ஆம் ஆண்டில் 54 சதவீதம் உயர்ந்து 84,330 கோடியாக உயர்ந்தது. இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாகத் தரவரிசையில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

Nykaa இன் நிறுவனர் மற்றும் CEO ஃபால்குனி நாயர் நாட்டின் இரண்டாவது பணக்கார பெண்மணி, இவர் உலகின் பத்தாவது பணக்கார பெண்மணி ஆவார். 2021 இல் அவரது சொத்து ஒரு வருடத்தில் 963 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய உயிரி மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகானின் CMD, கிரண் மஜும்தார் ஷா ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 29,030 கோடி ரூபாய். வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மருந்துகளை மிகவும் மலிவாக மாற்றுவதற்கான வழிகளை வகுத்து வருகிறார் கிரண்.

Divi's Laboratories இன் இயக்குனர் நீலிமா மோடபார்ட்டியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 50 சதவீதம் உயர்ந்து தற்போது 28,180 கோடி ரூபாயாக உள்ளது.

 

ஜோஹோவின் நிறுவனர்கள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் ராதா வேம்பு. இதில் ராதா வேம்புவின் தற்போதைய சொத்தின் நிகர மதிப்பு ரூ. 26,260 பில்லியன். சென்னையைச் சேர்ந்த ராதாவின் சொத்து கடந்த ஆண்டு 127 சதவீதம் உயர்ந்துள்ளது.

மருந்து மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான யுஎஸ்வியின் தலைவரான லீனா காந்தி திவாரி, இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 24 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடைகளை கடந்த ஆண்டு லீனா கொடுத்துள்ளதாக தெரிகிறது.  

1996 முதல் 2004 வரை தெர்மாக்ஸ் தலைவராக இருந்த அனு அகாவின் நிகர மதிப்பு ரூ.14,530 கோடி.  

கன்ஃப்ளூயண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான நேஹா நர்கடேவின் நிகர மதிப்பு ரூ.13,380 கோடி. அவர் பட்டியலில் எட்டாவது பணக்காரர் ஆவார். இவர் இந்திய பட்டியலில் புதிதாக இணைந்தவர் ஆவார். 

டாக்டர் லால் பாத் லேப்ஸில் இயக்குனராக உள்ள வந்தனா லாலின் நிகர மதிப்பு ரூ.6,810 கோடி. டாப் டென் லிஸ்டில் புதிதாக நுழைந்தவர். லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் நோயியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு 1983 இல் நிறுவனத்தில் சேர்ந்தார்.

மறைந்த ராமன் முன்ஞலின் மனைவி ரேணு முன்ஞல் ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.6,620 கோடி. இவர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்தார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link