ஆவணி மாதத்தின் இறுதி வாரத்திற்கான ராசிபலன்கள்! செப்டம்பர் 11-18 ஜோதிட கணிப்பு

Sun, 10 Sep 2023-10:11 am,

கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும்.

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்

சமூக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வி சார்ந்த பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.

சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்

கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும்.  

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

பங்குச் சந்தை சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். நிம்மதி நிறைந்த நாள்.

விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சாதுர்யமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கி கொள்வீர்கள்

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ரசனை திறனில் மாற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த கல்வியில் சாதகமான சூழல் அமையும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும் 

பயணங்களால் மனதில் தெளிவு ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும்

நிர்வாகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link