ஆடி போயி ஆவணி வந்தா நல்ல காலம் பொறக்கும்! பொறந்தாச்சு... ஆவணி முதல் வார ராசிபலன்!
ஆபரணங்களை வாங்கி மகிழும் காலம் இது கன்னி ராசியினரே... உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் பயணங்கள் செல்ல வாய்ப்புக் கிடைக்கும். குடும்பத்தினருடன் இணக்கமாக செயலாற்றும் காலம் இது
ஆவணி முதல் வாரம் உங்களுக்கு சற்று சரியில்லை என்றே சொல்லலாம் ரிஷப ராசிக்காரர்களே... விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் ஏற்பட்டாலும் தவிர்த்தால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும்
மகிழ்ச்சியான தருணங்கள் மனதில் உல்லாசத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்திருந்த செய்தி வந்து சேரும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நட்பு வாழ்க்கையில் புதிய மாற்றத்தைக் கொடுக்கும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்
எதிர்பாராத பயணங்களின் மூலம் ஏற்படும் அனுபவங்கள் வாழ்நாள் முழுவதற்கும் உதவியாக இருக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாக அமையும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி உங்கள் பெருமையை அதிகரித்துக் கொள்வீர்கள்
கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் ஏற்படும். குடும்பத்தில் புரிதல் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் மறையும். பொழுதுபோக்குக்காக அதிக செலவு செய்ய வேண்டாம்
நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை மாற்றம் தொடர்பான யோசனைகள் கைகூடும் காலம் இது. வேலையில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும். சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்
தன்னம்பிக்கை உண்டாகும். மாணவர்களுக்கு உகந்த சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமும், செல்வாக்கும் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொலைதூர பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும்.
வாழ்க்கையில் உங்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கமிஷன் தொடர்பான பணிகள் லாபம் கொடுக்கும். பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகும். பண வரத்து அதிகரிக்கும்
உங்கள் திறமைக்கு உண்டான பாராட்டுகள் வந்து குவியும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இதுவரை தெரியாத முக்கியமான விவரங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்
மிதுன ராசிக்கார்களுக்கு மனதில் உல்லாசம் பொங்கும் வாரம் இது. பயணங்கள் இனிமையானதாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வாழ்க்கை ரம்மியமானதாக மாறும்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவும். திடீர் பயணங்களால் அலைச்சலும் பண விரயமும் அதிகரிக்கும். வேலையாட்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். எந்த வேலையாக இருந்தாலும் சிந்தித்து முடிவெடுக்கவும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் இந்த வாரம் முடியாது
வசதி வாய்ப்புகள் மேம்படும் வாரம் இது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை செய்பவர்கள், தங்கள் பணி நிமித்தமான ரகசியங்களை ரகசியமாய் வைத்துக் கொள்வது நல்லது.கும்ப ராசிக்காரார்கள், குடும்பத்தினரோடு மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகளை எடுக்கலாம்