Weekly Horoscope (Sep 26 - Oct 2): இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை!
மேஷம் - இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானது. இந்த வாரம் பலமான பண ஆதாயமும் உண்டு. ஆனால் செலவுகளும் சிறிது அதிகரிக்கும். எனவே, வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் சூழ்நிலையை தவிர்க்கவும். நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் வாய்ப்பு உண்டு. காதல் துணையின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் போட்டியாளர்கள் முதலாளியுடனான உங்கள் உறவைக் கெடுக்க முயற்சி செய்யலாம். கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது.
ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், பட்ஜெட் மற்றும் உங்கள் பாக்கெட்டையும் மனதில் கொண்டு திட்டமிடுங்கள். புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். இந்த வாரம் உங்களுக்கான பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரம் திருமண வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். யாரிடமும் ஏமாந்து விடாதீர்கள். சிலர் தங்கள் நலனுக்காக தவறான கருத்தை கூறி உங்களை குழப்பலாம்.
மிதுனம் - கணக்கு விஷயத்தில் இப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு மிக முக்கியமானது. கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். ஏமாற்றுதல் அல்லது மோசடி கூட நடக்கலாம். மேலும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி வரலாம். உங்கள் காதல் துணையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். ஆடை மற்றும் அலங்காரத்திற்காக பணம் செலவழிக்கப்படலாம்.
கடகம் - இந்த வாரம் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கலாம். மன அழுத்த நிலையைத் தவிர்க்கவும். மது அருந்தும் பழக்கம் இருந்தால், முதலில் அதை நிறுத்துங்கள். உடல் நலத்திற்கு நல்லதல்ல. நாள்பட்ட நோய் காரணமாக பாதிக்கப்படலாம். நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கலாம். இந்த வாரம் நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
சிம்மம் - இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்கள் பேச்சில் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது. பிறர் வாழ்வில் தலையிடாமல் இருந்தால், அது உங்களுக்கு நல்லது. புகுந்த வீட்டினருடன் நல்ல உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஈகோ காரணமாக உங்களை மற்றவர்கள் உங்களை தவறாக மதிப்பிடுவார்கள். அதனால், கவனமாக எடந்து கொள்ளுங்கள்
கன்னி - பண ஆதாயம் உண்டாகும். மகாலக்ஷ்மியின் அருள் இந்த வாரம் உங்கள் மீது இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், அதற்கு நேரம் சிறப்பாக உள்ளது. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஷாப்பிங் செல்ல தயாராக இருங்கள்.
துலாம் - நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஒரு புதிய வாரம் தொடங்குகிறது. இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானது. பண வரவு விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்கும். துர்க்கையின் சிறப்பு அருள் உங்கள் மீது நீடித்து நிலைத்திருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் தாமதமாகி வருபவர்களுக்கு திருமணம் நிச்சய்மாகும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுடன் நல்ல உறவைப் பேணுவதால், உங்களுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிகம் - இந்த வாரம் உங்களை நீங்களே மதிப்பிட்டு ஆராய்ந்து கொள்வீர்கள். கடந்த காலத்தில் எதை இழந்தோம், எதை சாதித்தோம் என்பதைப் பற்றி சிந்தித்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள்ளை குழப்பும் நோக்கில் பேசும் நபர்களின் கருத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
தனுசு - நவராத்திரியின் முதல் நாளிலிருந்து புதிய வாரம் தொடங்குகிறது. வாரத்தின் பிற்பகுதியில், தடைபட்ட வேலைகள் முடியும். ஒரு நீண்ட பயணத்தினால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஆன்மீக பயணமும் செல்லலாம். துர்க்கையின் அருள் உங்கள் மீது பரிபூரணமாக இருக்கும். மாணவர்கள் படிப்பை முடிப்பதில் வெற்றி பெறுவார்கள். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு பலன்கள் சிறப்பாக உள்ளன.
மகரம் - இந்த வாரம் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் உங்களில் ஒரு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் உணர்வீர்கள். புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களின் பொறுப்பு அதிகரிக்கலாம்.
கும்பம் - இந்த வாரம் உங்கள் நிலுவையில் உள்ள வேலைகளை பெரிய அளவில் முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தையில் பங்குகளை நன்றாக யோசித்து முதலீடு செய்யுங்கள். இல்லை என்றால், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மீனம் - நவராத்திரியில் தொடங்கும் வாரம் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. வீட்டிற்கு புதிய விருந்தினர் வருவதைப் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். மரியாதையும் மரியாதையும் அதிகரிக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொல்லை தரும். எனவே உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.