அக்டோபர் 7-13: ஆயுத பூஜை விஜயதசமி வாரத்தில் யாருக்கு என்ன ராசிபலன்? வாரந்திர ராசிபலன்கள் அறிவோம்...

Fri, 04 Oct 2024-5:44 pm,

திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலை ராசிபலனும் கொடுக்கலாம். அக்டோபர் மாதம் 7 முதல் 13ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். அடுத்த வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட இது உதவியாக இருக்கலாம்

உத்தியோகம் தொடர்பான பயணங்களால் நல்லது நடக்கும் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். பிரச்சனைகள் மனதை வாட்டும், உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும்

புதிய நபர்களின் அறிமுகம் நல்ல நேரத்தைக் கொண்டுவரும். பிறருக்கு உதவி செய்து மகிழும் காலம் இது என்பதால் கும்ப ராசியினருக்கு வரும் வாரம் நல்லதாக இருக்கும்

மகர ராசியினரின் வாழ்க்கையில் வசந்தம் வரும் நேரம் இது. மகிழ்ச்சியாக இருக்க உலகமே உங்களுக்கு ஒத்துழைக்கும் என்று சொல்லலாம், அதிர்ஷ்டமான வாரம் இது

நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. தேவையில்லாத பேச்சைத் தவிர்ப்பதும் அனுசரித்துச் செல்வதும் நல்லது. கால தாமதம் உண்டானால் கவலைப்பட வேண்டாம்.  எதிர்பாராத சில பொறுப்புகள் சுமையாய் அழுத்தும்

திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும் கால இது, கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம். வியாபாரம் தொடர்பான வேலைகளில் கவனமாக செயல்படவும்.  

ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய சமயம் இது. வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிந்து செயல்படுவீர்கள்

குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதால் தவறில்லை என்பது புரியு. உறவுகளிடத்தில் இறுக்கமான சூழல் உண்டாகும். ஆர்வத்துடன் செயல்பட்டால், செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதுடன், புதிய கோணத்திலும் சிந்திக்கலாம்

காரியத்தடைகள் விலகும். குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நீடிப்பதால், மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் ஊக்கம் பிறக்கும். எதிலும் திருப்தியற்ற மனநிலை மாறும்

சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிக்கும் வாரம் இது. புதிய அறிமுகங்களும், ஒத்துழைப்பும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும், 

சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு முன்னேற்றம் காணும் வரும் வாரம், மிதுன ராசிக்காரர்களுக்கு தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். 

ரிஷப ராசியினருக்கு வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வேலை செய்வதில் ஆர்வமின்மை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது

நமது பலத்தையும் பலவீனத்தையும் தெரிந்துக் கொள்வது நல்லது என்றாலும், அதே சிந்தனையில் மூழ்கிப் போய்விட்டால் அது மனக்கவலைகளை அதிகரிக்கும். சிந்தனைகளுக்கு கடிவாளம் போடுங்கள்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link