உடல் எடையை குறைக்கணுமா? தயிருடன் இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடுங்க!
உடல் எடை இழப்பில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது, ஓட்ஸ் உடன் தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த 'ஓட்ஸ் தாஹி மசாலா' சிறிது கசப்பான சுவையில் இருந்தாலும் சாப்பிட ஏற்ற வகையில் இருக்கும். 20 நிமிடங்களில் தயார் செய்யப்படும் இந்த உணவை சாப்பிடுவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
புரோட்டீன் சத்து அதிக நிறைந்துள்ள வெள்ளை கொண்டைக்கடலை உடன் தயிர் சேர்த்து செய்யப்படும் 'தாஹி சன்னா சாட்' உணவு உங்களது எடை இழைப்புக்கான டயட் சார்டில் இடம்பெற வேண்டிய ஒரு உணவு வகையாகும்.
மதிய உணவுக்கு ஏற்ற அதேசமயம் உடல் எடை இழப்புக்கு ஏற்ற சிறந்த உணவு என்றால் தயிர் மற்றும் சிக்கன் சேர்த்து செய்யப்படும் 'லோ ஃபேட் தாஹி சிக்கன்' ஆகும். இந்த உணவில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது.
பல வகையான காய்கறிகள் மற்றும் சில மசாலா பொருட்கள் மற்றும் அதிகமாக தயிர் சேர்த்து செய்யப்படும் 'வெஜ் ரைத்தா' அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இது உங்களுக்கு வயிறு உணர்வை ஏற்படுத்தி உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
ஆளி விதைகள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது, தயிர் மற்றும் ஆளி விதைகள் சேர்த்து செய்யப்படும் இந்த 'ஃப்ளாக்ஸ் சீட் ரைத்தா' உடல் எடை குறைப்பிற்கு உதவுவது மட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.