உடல் எடையை குறைக்க ஜில்லுனு ஒரு வழி: இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்
முதலில் ஆரஞ்சு பழம் போல் இருக்கும் பம்பளிமாஸ் பழம் பற்றி பார்க்கலாம். ஆரோக்கிய நிபுணர்களின் படி, பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உங்கள் எடையைக் குறைக்கும். எனினும், இந்த பழத்தை பற்றி பலருக்குத் தெரிவதில்லை. இதை நீங்களும் இதுவரை சாப்பிட்டது இல்லை என்றால், உடனடியாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவும்.
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்ற கூற்று உள்ளது. அது உமைதான்!! ஆப்பிளிலும் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆப்பிள் பழம் எடை இழப்புக்கு உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெர்ரி சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். உங்கள் உணவில் தினமும் அரை கப் பெர்ரி சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு 42 கலோரிகளை வழங்குகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உடலில் சுமார் 12 சதவீதம் வைட்டமின்-சி மற்றும் மாங்கனீசை வழங்குகிறது.
கிவி பழம் உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்த பழமாக கருதப்படுகின்றது. இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)