எடை ஓவரா ஏறுதா? பப்பாளியை இப்படி சாப்பிடுங்க, ஏழே நாளில் சூப்பரா குறைக்கலாம்
உடல் எடை அதிகரிப்பால் அவதியில் உள்ளவர்கள் பப்பாளியை உட்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உங்கள் உணவு எளிதில் ஜீரணமாகும். அதே நேரத்தில், பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது எடையைக் குறைக்க உதவுகிறது.
தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க பப்பாளி உங்களுக்கு உதவும். எடை இழப்புக்கு நீங்கள் பப்பாளியை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை இங்கே காணலாம்.
தொப்பையில் கொழுப்பினால் தொந்தரவு இருந்தால், பப்பாளியை தயிரில் நறுக்கிப்போட்டு காலை உணவில் சாப்பிடலாம். இதனுடன் வேறு சில பழங்களையும் சேர்க்கலாம். ஊறவைத்த உலர் பழங்களையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம், இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும், அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
காலை உணவில் ஒரு கிளாஸ் கிரீம் பால் மற்றும் பப்பாளி சாப்பிடுங்கள். இதன் மூலம் புரதச்சத்தும் கிடைத்து பல மணி நேரம் வயிறு நிறைந்திருக்கும். உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவும்.
சாதாரண பப்பாளி சாப்பிட பிடிக்கவில்லை என்றால் பப்பாளி சாட் செய்தும் சாப்பிடலாம். இதற்கு, பப்பாளியை துண்டுகளாக நறுக்கி, அதன் மீது கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் தூவி உட்கொள்ளுங்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.