கொழுப்பை எரித்து தொப்பையை கரைக்க.. வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் ஒன்றே போதும்
சுரைக்காய் ஆரோக்கிய நன்மைகள்: ஊட்டசத்துக்கள் நிறைந்த காய்கறியான சுரைக்காய் பலருக்கு பிடிக்காத ஒரு காய்கறி எனக் கூறலாம். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை விரைவாக குறைப்பதில் மிகவு, உதவுவதோடு மட்டுமால்லாமல் அது எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது.
உடல் பருமனை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்: சுரைக்காயில் 98 சதவீதம் தண்ணீர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. மேலும், உடல் பருமனைக் குறைக்க மிகவும் முக்கியமாக தேவைப்படும் சத்தான நார்சத்து இதில் அபரிமிதமாக உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கிறது.
கலோரி அளவு: அதிக கலோரிகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகறிக்கிறது. எனவே, உடல் பருமன் குறைய குறைந்த கலோரி உணவுகளை சாப்பிட வேண்டும். 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே இது எடை இழப்பிற்கு சிறந்த காய்கறியாக உள்ளது.
செரிமான ஆரோக்கியம்: உடல் பருமன் குறைய செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். மேலும் வளர்சிதை மாற்றமும் சிறப்பாக இருக்க வேண்டும். உங்கள் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறதோ, அவ்வளவு வேகமாக உடல் கொழுப்பு கரையும். இதற்கு சுரைக்காய் உதவும்.
சுரைக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை: சுரைக்காய் சாறு தயாரிக்க, சுரைக்காய் தோலை நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சில புதினா இலைகளை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். நன்றாக அரைத்தவுடன், சீரகத் தூள், உப்பு, சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சுரக்காய் ஜூஸ் தயார். இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால், அதிகபட்ச பலனைப் பெறலாம்.
நீரிழிவு நோய்: சுரைக்காய் உடல் பருமனை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சுகர் லெவலையும் கட்டுக்குள் வைக்கிறது. ஏனெனில் சுரைக்காய் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு கொண்ட உணவு. எனவே, இதனை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுவதோடு, அதனால் ஏற்படும் எடையும் அதிகரிக்காது
கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படும்: சுரைக்காய் சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் எரிக்கப்படுவதால், மாரடைப்பு அபாயம் குறைகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.