உடல் எடை குறையணுமா: இதை மட்டும் செஞ்சா போதும்
ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாப்பிடுவது அதிக பலன்களைத் தரும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. நீங்கள் கடைகளில் கிடைக்கும் மற்ற பானங்களுக்கு பதிலாக, எலுமிச்சைப் பழ சாரை குடித்தால், உடலில் கலோரி உட்கொள்ளல் மிகவும் குறைவாக இருக்கும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
எடையைக் குறைப்பதோடு, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதில் எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சம்பழம் உடலில் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது. மேலும் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பையும் இது குறைக்கிறது.
எலுமிச்சை நீரை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்படுகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. எப்போதும் பசி எடுப்பது போன்ற உணர்வு உங்களுக்கு இருக்காது. இதனால், தேவை இல்லாத உணவுகள் உட்கொள்வதை தடுக்கலாம். இதன் காரணமாக இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது எலுமிச்சைப் பழ நிரை குடிக்கும்போது, அதிலிருந்து அதிக நன்மைகளைப் பெற முடிகிறது. ஏனென்றால் எலுமிச்சைப் பழத்தில் மற்ற பானங்களை விட குறைவான கலோரிகள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, உடலை ஹைட்ரேட் செய்கிறது. இதன் காரணமாக ஜூஸ் அல்லது மற்ற உயர் கலோரி பானங்களுடன் ஒப்பிடும்போது எடை அதிகரிப்பதை இது வெகுவாக தடுக்கிறது.