உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..
பல 90ஸ் கிட்ஸ்களுக்கு க்ரஷ்ஷாக இருந்தவர், சினேகா. தனது திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார்.
சினேகா, தற்போது விஜய்யின் GOAT படத்தில் நடித்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள தமிழ் திரைப்பட கதாநாயகிகளுள் இவரும் ஒருவர். இதற்காக இவர் செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
சினேகா, தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கார்டியோ உடற்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்வாராம். இந்த உடற்பயிற்சிகளால் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்களும் கூறுகின்றனர்.
சினேகா, ஜிம் செல்ல தவறாதவர் என கூறப்படுகிறது. ஒரு வாரத்தில் நான்கு முறை கண்டிப்பாக ஜிம்மிற்கு சென்று உடல் எடையை ஏறாமல் பார்த்துக்கொள்வாராம்.
சினேகா, வெயிட் ட்ரெயினிங்கும் செய்கிறார். ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சியும் இவருக்கு நல்ல பயணளிக்கும் பயிற்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தான் சாப்பிடும் உணவுகளை கண்ணும் கருத்துமாக தேர்ந்தெடுப்பவர், சினேகா. இவர், புரதம் நிறைந்த, நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை தனது டயட்டில் சேர்த்துக்கொள்வாராம்.
ஒட்டுமொத்தமாக, உடலை நன்றாக பார்த்துக்கொள்ள சரியாக தண்ணீர் குடித்து ஹெல்தியான பானங்களை பருகி வருகிறார், சினேகா. இதை ஃபாலோ செய்தால் நாமும் ஃபிட்டாக இருக்கலாம்.