உங்களை ஃபிட்டாக்கும் வெங்காயம்: எடை குறைய இதை சாப்பிட்டால் போதும்
வெங்காயம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். 1 கப் வெங்காயத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே, தினசரி உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு தேவையான நார்ச்சத்து நமக்கு அதன் மூலம் கிடைக்கும். மேலும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து பசியைத் தணிக்கிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்காமல் இருக்க இது உதவும்.
வெங்காயத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, 1 கப் நறுக்கிய வெங்காயத்தில் 64 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே எடை இழப்புக்கு வெங்காயத்தை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற தாவர கலவையும் நிறைந்துள்ளது. இது ஒரு ஃபிளாவனாய்டு ஆகும். இது உடல் பருமனைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
- வெங்காய சாறு
- வெங்காய சூப்
- வெங்காயம் மற்றும் வினிகர்