West Bengal: மமதா பானர்ஜி தலைமையிலான 43 அமைச்சர்கள் பதவியேற்றனர்
மமதா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 43 அமைச்சர்கள் அனைவருக்கும் ஆளுநர் ஜகதீப் தங்கார் ஒரே நேரத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்றது. இதனையடுத்து மேற்கு வங்கத்தின் முதல்வராக 3-வது முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார்.
மமதா அமைச்சரவையில் 2 முறை நிதி அமைச்சராக இருந்தவர் அமித் மித்ரா. தற்போது முடிவடைந்த சட்டசபை தேர்தலில் அமித் மித்ரா போட்டியிடவில்லை. அமித் மித்ராவையே நிதி அமைச்சராக்க விரும்பும் மமதா சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ.வாக்க மமதா திட்டமிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுப்ரதா முகர்ஜி, பார்தா சட்டர்ஜி, ஃபிர்ஹாத் ஹகீம், ஜோதி பிரியா மாலிக், மோலோய் கடாக், அரூப் பிஸ்வாஸ், டாக்டர் ஷாஸி பஞ்சா, ஜாவேத் அகமது கான் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகின்றனர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஹூமாயூன் கபீர், முன்னாள் பெங்கால் ரஞ்சி கிரிக்கெட் அணி கேப்டன் மனோஜ் திவாரி, ஷியூலி சுஷா என புதுமுகங்களும் கேபினட்டில் இடம்பெறுகின்றனர்.