தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!
சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கொண்டு சூரியகொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார்
அர்யமான் என்னும் பெயரில் வைகாசியில் ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார் சூரியன்
ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்ட சூரியன், அந்த மாதத்தில் ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார்.
ஆடி மாதம் அம்சுமான் என்ற நாமத்துடன் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார் சூரிய பகவான்
ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமத்துடன் ஆயிரத்து நானூறு கதிர்கள் கொண்டவராக காட்சியளிப்பார் சூரிய பகவான்
புரட்டாசியில் வருணன் என்ற திருநாமத்தில் ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருவார் சூரியன்
ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களுடன் திகழ்வார் சூரிய பகவான்
கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு, ஆயிரத்து நூறு கதிர்களை வீசுவார் சூரியன்
மார்கழி மாதத்தில் சூரியநாராயண் என்ற பெயருடன் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டு திகழ்வார் சூரியன்
தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்துடன் ஆயிரம் கதிர்களைக் கொண்டிருப்பார் சூரிய பகவான்
மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார் சூரியன்
பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்கள் கொண்டவராக திகழ்கிறார் சூரிய பகவான்