பச்சை தக்காளியின் பலே நன்மைகள்: கூச்சப்படாம சாப்பிடுங்க
பருவகால பழங்கள் மற்றும் காய்களை உட்கொள்வது நம் உடல் ஆரோகியத்திற்கு மிக நல்லது. இவை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் நம் உடலுக்கு அளிக்கின்றன்.
பச்சை தக்காளி பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். பச்சை தக்காளியை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம். இதை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
தக்காளி சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம். பச்சை தக்காளி மற்றும் தக்காளி சாறு கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தக்காளியில் உள்ள லைகோபீன் ஆல்கஹாலிக் லீவர் நோயைத் தடுக்க உதவுகிறது.
தக்காளியில் (Tomato) லைகோபீன் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்க்கு மிகவும் நல்லது. இது இதய நோய் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கிறது. மேலும் உடலில் HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதனால் இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் 1 தக்காளியை பச்சையாக சாப்பிட வேண்டும். தக்காளியில் உள்ள லைகோபீன் இன்சுலின் செல்களை மேம்படுத்துகிறது. இது செல்களை உடையாமல் பாதுகாக்கிறது. மேலும் உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். தக்காளி உங்கள் உடலின் நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது நீரிழிவு நோயையும் குறைக்கிறது.
தக்காளி சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஒரு ஆய்வின் படி, தக்காளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இது வைரஸைத் தடுக்கும் இயற்கையான செல்களைக் கொண்டுள்ளது.
பச்சை தக்காளியில் (Raw Tomato) ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தக்காளியில் கரையக்கூடிய மற்றும் கரையாத கலவைகள் உள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)