ஞாபசக்தியை அதிகரிக்கும் ஜீம்பூம்பா மந்திரம் பற்றித் தெரியுமா !!
ஒரு விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் நினைவில் கொள்ள சில நல்ல பழக்கங்கள் இங்கு கற்றுக்கொள்ளவும்.
குறுகிய கால நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, இது ஒரு சவாலாக இருக்கலாம். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யவும். மூளையின் நரம்புகள் புத்துணர்வுடன் செயல்படத் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஞாபசக்தியை தக்கவைக்க நீங்கள் தினமும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நாளொன்றுக்குத் தினமும் 8 கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சி செய்தல் மூளையின் செயல்பாடுகள் மட்டுமின்றி உடலும் ஆரோக்கியமுடன் இருக்கும்.
உரையாடல்களில் ஈடுபடுவது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். மனதிற்கு உரையாடல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் தன்னிடம் இருக்கும் குறைகளைப் பிடித்த நபரிடம் கொட்டி தீர்க்கவும். இதனால் மனதின் பாரம் குறைந்த உணர்வு ஏற்படும்.
ஒரு உரையாடலின் தொடரைப் பின்தொடர்வது கடினமாக இருக்கலாம், அடிக்கடி தகவல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கலாம் அல்லது வாக்கியத்தின் நடுப்பகுதியில் சிந்தனையை இழக்க நேரிடும்.
மனித மூளையில் ஹிப்போகாம்பஸ் எனப்படும் ஒரு பகுதி உள்ளது, இது கற்றல் மற்றும் நினைவகத்திற்குப் பொறுப்பாகும். சிலர் வயது அல்லது ஏதோ நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் நிச்சயம் வேலை மற்றும் வீட்டில் ஞாபசக்தியை தொலைத்துவிடுவார்கள்.
வேறு சிந்தனையில் பொருட்கள் தவறாக வைப்பது மற்றும் ஒருவர் பேசுவதைக் கவனிக்காமல் வேறு சிந்தனை செய்வது அதிகம் ஞாபசக்தியை இழக்க வழிவகுக்கும்.
ஒருவர் அதிகம் ஞாபகத்திறன் இழக்க முக்கியக் காரணம் பல கேள்விகள், கதைகள் மற்றும் உரையாடல்கள் இவற்றை அதிகம் சிந்தித்தால் நிச்சயம் ஞாபகத்திறன் சிறிது சிறியதாக இழந்துவிடுவீர்கள்.