மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: SCSS திட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்த அரசு
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 55 - 60 வயதுக்குட்பட்ட பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்களை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நவம்பர் 7 அன்று வழங்கியது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
55 - 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு SCCS இல் முதலீடு செய்வதற்கான நேரத்தை ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. தற்போது உள்ள விதியின் கீழ், ஒருவர் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்ய வேண்டும்.
ஓய்வூதிய பலன்களின் நோக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, ஓய்வூதிய பலன் என்பது ஓய்வுக்குப் பிறகு பெறப்பட்ட அனைத்து வகையான தொகையையும் குறிக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகை, ஓய்வு அல்லது இறப்பு பணிக்கொடை, விடுப்பு பணமாக்குதல் அல்லது EPS இன் கீழ் ஓய்வூதிய பலன்கள் ஆகியவை அடங்கும்.
புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் துணைக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவித் தொகையை முதலீடு செய்ய அனுமதி கிடைக்கும்.
புதிய விதிகளின்படி, ஒரு வருடம் முடிவதற்குள் கணக்கை மூடினால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 1 சதவீதம் கழிக்கப்படும். முன்னதாக, ஒரு வருடத்திற்கு முன் கணக்கை முடித்துவிட்டால், வட்டி கொடுக்கப்படாது, கணக்கில் இருக்கும் தொகை மட்டும் திருப்பி அளிக்கப்படும்.
கணக்கு வைத்திருப்பவர்கள் எத்தனை பிளாக்குகளாக வேண்டுமானாலும் கணக்கை நீட்டிக்கலாம். ஒவ்வொரு பிளாக்கும் மூன்று ஆண்டுகள் நீடிக்கும். முன்னதாக, அதன் நீட்டிப்பு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
அறிவிப்பின்படி, ஒருவர் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்திருந்து. ஆனால் அவர் நான்கு ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்துவிட்டால், இந்த சூழ்நிலையில் கணக்கு வைத்திருப்பவருக்கு சேமிப்புக் கணக்கின் வட்டி மட்டுமே கிடைக்கும். இந்தச் சூழ்நிலையில் முன்னதாக, இத்திட்டத்தின் வட்டி விகிதம் மூன்று ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்று இருந்தது. அந்த அறிவிப்பின்படி ஐந்து வருட முதலீட்டு காலமும் நீக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தபால் திணைக்களத்தினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் திட்டத்தில் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் முதலீடு செய்துவிட்டு, ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து கணக்கை முடித்துவிட்டால், முதலீட்டாளர் எத்தனை மாதங்களுக்கு முதலீடு செய்தாரோ அத்தனை மாதங்களுக்கு வட்டி வழங்கப்படும்.