பட்டயை கிளப்பும் பப்பாளி: நம்பவே மாட்டீங்க.... அவ்வளவு நன்மைகள்
பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இதில் உள்ள பப்பேன் என்ற என்சைம் புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது. பப்பாளியால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற என்சைம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதை தினமும் உட்கொள்வதால் வாயுத்தொல்லை, உப்பசம் ஆகியவற்றில் நிவாரணம் பெறலாம்.
இந்நாட்களில் மலச்சிக்கல் பலருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பப்பாளியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இது செரிமானத்தை மேம்படுத்தி அதன் மூலம் மலச்சிக்கலை குணமாக்குகிறது.
பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பப்பாளியை உட்கொள்வதால் வயிற்றில் நிரம்ப்பிய உணர்வு இருக்கும். இதனால், நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.
பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. பப்பாளியை உட்கொள்வதுடன், இந்த பழம் மற்றும் தோலை அரைத்து மாஸ்காக பயன்படுத்துனாலும், சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது ஒரு மிகச்சிறந்த ஆண்டிஆக்சிடெண்ட் ஆகும். பப்பாளியை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.