காலையில் சுகர் லெவல் எகிறுதா? இதை சரி செய்தால் ஈசியா சரி செய்யலாம்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய மிக அவசியமாகும். இதற்கு பல வித கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். மருத்துவர்களிடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து உணவு மற்றும் மருந்து மாத்திரைகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
காலையில் மட்டும் ஏன் இரத்த சர்க்கரை அதிகரிக்கிறது? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காலையில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கு உணவு மற்றும் வாழ்க்கை முறையும் காரணமாக கருதப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலையில் சர்க்கரை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இரவில் தூங்கும் போது, உடலில் ஹார்மோன்களை கட்டுப்படுத்த அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக காலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது தவிர, அதிகப்படியான மன அழுத்தம் இருந்தால், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோனும் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவும், காலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை நோய்க்கான மருந்தை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாததாலும் பல சமயங்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது தவிர வேறு பல காரணங்களும் உள்ளன.
உடல் இயக்கம் இல்லாதவர்களுக்கும் காலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்பவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே, நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங் அல்லது கார்டியோ உடற்பயிற்சி ஆகியவற்றை செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
இரவில் தாமதமாக சாப்பிடுபவர்கள் அல்லது இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து சாப்பிடுபவர்களுக்கு, காலையில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். மேலும். இரவில் வெகுநேரம் கண்விழிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் ஆகியோருக்கும் காலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது மிக அவசியமாகும்.
சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது 2 முதல் 3 மணி நேர இடைவெளி இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
காலையில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், எடையைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு ஹார்மோன்களின் சரியான சமநிலை அவசியம். எடை கட்டுக்குள் இருந்தால், அதன் காரணமாக இரத்த குளுக்கோஸ் அளவும் கட்டுக்குள் இருக்கும். ஹார்மோன்களின் சமநிலை சீர்குலைந்தால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.