குரு பகவானை வசியப்படுத்தும் வியாழக்கிழமை பரிகாரங்கள்... வழிபாடு...
)
வியாழன் அன்று பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பல என்றாலும், கிரகங்களின் அனுகிரகம் கிடைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்தது
)
தொழில், வியாபாரத்தில் வெற்றி கொடுக்கும் குரு பகவான், வாழ்க்கையில் நல்ல துணையையையும் கொடுப்பார். எனவே தான் வியாழனன்று தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானுக்கு பூஜைகள் செய்வதும் விரதம் இருப்பதும் தொன்று தொட்டு இருக்கும் வழக்கம்
)
தோஷங்களில் இருந்து விடுபட குரு பகவானை வழிபட சிறந்த வழிகள் என்றால் முதலில் விளக்கு போடுவதை சொல்லவேண்டும். எந்தவொரு தெய்வத்தையும் வணங்கும்போது விளக்கேற்றுவது அவசியம். அதிலும் குருஓரையில் செய்யும் பூஜைகளும், விளக்கிடுவதும் மிகவும் நல்லது
குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள் என்பதால், மஞ்சள் கிழங்கு வைத்து பூஜிப்பதும், மஞ்சளை தானமாக கொடுப்பதும் நல்லது
கொண்டைக்கடலை மாலையை கோர்த்து குரு பகவானுக்கு மாலையாக சாற்றி வழிபடவும்
வியாழனன்று மஞ்சள் நிற ஆடை அணியவும்
விநாயகர் வழிபாடு குரு பகவானின் அருளைப் பெற்றுத் தரும்
குருவுக்கு உகந்த புஷ்பராகத்தை அணிவது நல்லது
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது