PM Vishwakarma Yojana: தினமும் ரூ.500 தரும் அரசு.. நீங்களும் பெறலாம், இதோ விதிகள்
பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு எண்ட்-டு-எண்ட் ஆதரவை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தில் 18 தொழிமுறை தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா 17 செப்டம்பர் 2023 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 18 பாரம்பரிய வணிகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் நிதி நன்மைகளை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளது. இந்த திட்டத்தில் உதவித்தொகையாக ரூ.500 வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தில் எப்படி சேர்வது? இந்த விஸ்வகர்மா திட்டத்தில் சேர யார் யாருக்கு தகுதி உள்ளது? இதில் நாம் பெறக்கூடிய பலன்கள் என்ன?
பாரம்பரிய கலைத் திறன்களைக் கொண்டவர்கள் சொந்தமாக தங்கள் வணிகத்தை அமைக்க இந்தத் திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தில், கடன் கிடைப்பது மட்டுமின்றி, திறன் பயிற்சியும் கிடைக்கின்றது. கொல்லர், பொற்கொல்லர், குயவர், தச்சர், செருப்பு தைப்பவர்கள் என இப்படிப்பட்ட பாரம்பரிய திறன்களைக் கொண்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்.
கொத்தனார்கள், படகு கட்டுபவர்கள், கொல்லர்கள், பூட்டு தொழிலாளிகள், முடி திருத்துபவர்கள், பூ மாலைகள் செய்வோர், சலவை தொழிலாளிகள், சிற்பிகள், மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள், கூடை/பாய்/துடைப்பம் செய்பவர்கள், செருப்பு அல்லது ஷூ தயாரிப்பாளர்கள், தையல்காரர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்களுக்கு இதன் பயன் கிடைக்கும்.
பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பல நன்மைகள் கிடைக்கின்றன. இத்ல் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகின்றது. இதற்கு ஈடாக அவர்களுக்கு தினசரி ரூ.500 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு, தங்கள் தொழிலுக்கு தேவையான கருவிகளை வாங்கிக்கொள்ள பயனாளிகளுக்கு ரூ.15,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 லட்சம் ரூபாய்க்கான முதல் கடன், உத்தரவாதம் இல்லாமலும் குறைந்த வட்டி விகிதத்திலும் கிடைக்கின்றது. பயனாளிகள் இந்த கடனை திருப்பி செலுத்திய பிறகு கூடுதலாக ரூ.2 லட்சம் கடன் பெற வசதி உள்ளது.