திருடும் குழந்தைகளை திருத்துவதற்கான வழிகள்! ‘இதை’ செய்தால் அந்த எண்ணமே இருக்காது..
குழந்தைகள் திருடுவது ஏன்?
அனைத்து திருடர்களுக்கும் திருடுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருப்பது போல, குழந்தைகள் திருடுவதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளிடம் எதையாவது வாங்கி தர மறுத்தாலோ, அவர்களுக்கு ஏதாவது மறுக்கப்பட்டாலோ அதை அடைந்தே தீர வேண்டும் என்ற தாகம் எழும். இது, மனிதர்களின் இயல்பான குணாதிசயங்களுள் ஒன்று. இதை, பெற்றோர்தான் திருடுவது தவறு என்று கூறி திருத்த வேண்டும். அதை எப்படி செய்வது.
குழந்தைகளை ஏன் கண்டிக்க வேண்டும்?
குழந்தைகள் என்ன தவறு செய்தாலும், ‘அது குழந்தைதானே’ என டைலாக் பேசக்கூடாது. ஏன் என்றால், இவர்கள்தான் நாளை வளர்ந்து ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறார்கள் என்பதை அனைவருமே மனதில் கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் திருடினால் அதனை கண்டிப்பது, பெற்றோர் இருவரின் கடமையும் ஆகும்.
நேர்மையை கற்பித்தல்:
குழந்தைகளுக்கு, நேர்மையாக இருப்பது பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களிடம் அடிக்கடி பொய் கூறுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும், நேர்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேச வேண்டும். அவர்கள் உங்கள் சொல்படி கேட்டு நேர்மையாக இருக்க ஆரம்பித்தால் அவர்களை பாராட்டுவதும் நல்லதாகும். இதனால், அவர்கள் தங்கள் வாழ்வு முழுவதும் தனக்கும் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் உண்மையாக இருப்பர்.
திருடுவது தவறு என போதித்தல்:
திருடுவது தவறு என நீங்கள் கற்றுக்கொடுத்தால் மட்டும் குழந்தைகள் திருந்திவிட மாட்டார்கள். எனவே, திருடுவதற்கு சட்டத்தின் பிடியில் எந்த மாதிரியான தண்டனைகள் சுமத்தப்படுகின்றன, திருடுவதால் அவர்களுக்கு சமுதாயத்தில் என்ன பெயர் உண்டாகும் என அனைத்தையும் கற்றுக்கொடுத்தால் அவர்களுக்கு மிக எளிதில் புரியும்.
திருடியதை திருப்பி கொடுத்தல்:
உங்கள் குழந்தை உங்களை தவிர வேறு யாரிடனும் திருடி விட்டால், அது உங்களுக்கு தெரிந்திருந்தால் உடனடியாக அவர்களிடம் அது தவறு என்று கூறி, திருடிய பொருளை அவர்களாகவே திரும்பி கொடுக்கும் படி செய்ய வேண்டும். அப்போதுதான் தாங்கள் செய்த தவறுக்கான பலனை அவர்கள் அனுபவிக்கவும் செய்வர், இனி அப்படி செய்யாமலும் இருப்பர்.
பின்விளைவுகள் குறித்து போதித்தல்:
உங்கள் குழந்தை திருடும் போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்களாகவே அனுபவிக்க வேண்டும். இதனால், அடுத்த முறை திருடினால் என்ன நேரிடும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வர். தவறு செய்தால், அவர்களின் முகத்திற்கு நேரே மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதையும், அவர்கள் அந்த பொருளை எடுத்தால் யாருக்கு என்ன சிரமம் நேரிடும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சில விஷயங்களை பெற்றோர் பேச வேண்டும்.
மனநல ஆலோசனை தேவைப்படுமா?
குழந்தைகள் திருடுவது அவர்களுக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டாலோ அல்லது நீங்கள் இது குறித்து கூறும் அறிவுரைகளை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றாலோ மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தைகளுக்கென இருக்கும் மனநல மருத்துவரை அணுகுவது சிறந்தது. இதற்கு காரணம், உங்கள் குழந்தைக்கு திருடுவதனால் மன ரீதியாக என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது மற்றும் அதனை எப்படி களைவது என்பதற்காகதா.ன்