மே 1 முதல் மினிமம் பேலன்ஸ் விதியில் வரும் மிகப்பெரிய மாற்றம்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
வருமான, வரி பிஎஃப் மட்டும் இல்லாமல் UPI பரிவர்த்தனை, சிறு சேமிப்பு திட்டங்கள், கிரெடிட் கார்டு பயன்பாடு, வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது போன்ற பல விஷயங்களில் விரைவில் பல புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்று தான் வங்கியில் உங்கள் சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பது.
ஏற்கனவே ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகள் தங்கள் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டணங்களில் கொண்டு வந்த மாற்றங்கள் பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளை போல பிற வங்கிகளும் New Minimum Balance ரூல்ஸ் என்பதை மே 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளது.
அதன்படி இந்த பதிவில் Yes Bank அறிவித்துள்ள தகவலை குறித்து பார்க்கலாம். Yes வங்கியில் ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கு (Pro Max Savings Account) வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 50,000 ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல எஸ் ப்ரோ ப்ளஸ் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
அல்லது அவர்களுக்கு 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல எஸ் பேங்க் பொருத்தவரை "கிசான் சேமிப்பு கணக்கு" வைத்திருப்பவர்கள் ஐயாயிரம் ரூபாயை குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். விரைவில் மற்ற வங்கிகளும் இதை கடைபிடிக்க இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.