வாட்ஸ் அப் சாட்டை லாக் செய்து வைப்பது எப்படி?

Tue, 16 May 2023-10:40 pm,

Meta நிறுவனத்தின் Whatsapp செயலி இப்போது புதிய Chat Lock வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் ஒரு App திறக்க Fingerprint, Face Unlock, Passcode வசதிகள் பயன்படுத்துவதை போலவே தனிப்பட்ட Chat திறக்கவும் இவற்றை பயன்படுத்தலாம். இது Android மற்றும் iOS என இரு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த புதிய Chat Lock நாம் Activate செய்தால் நாம் பாதுகாப்பாக வைக்க நினைக்கும் Chat தனியாக ஒரு Folder சென்றுவிடும். அந்த Folder திறக்க நமது Finger Print, Passcode, Face Unlock போன்றவற்றை பயன்படுத்தி திறக்கலாம்.

 

இதில் வரும் நோட்டிபிகேஷன் நமக்கு நேரடியாக தெரியாது. இவற்றில் வரும் போட்டோ மற்றும் வீடியோ போன்றவையும் நமது Gallery'யில் சேமிக்கப்படாது. 

 

இந்த வசதி குடும்ப உறுப்பினர்களிடும் ஸ்மார்ட்போனை பகிர்ந்துகொள்ளும் பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்னும் வரும் நாட்களில் இந்த Chat Lock வசதி மேலும் மேம்படுத்தப்பட்டு இன்னும் பல தனித்துவமான வசதிகள் சேர்க்கப்படும்.

 

முதலில் உங்களின் Whatsapp சமீபத்திய Update செய்யவும். இது Android மற்றும் iOS கருவிகள் அனைத்திலும் கிடைக்கும். நீங்கள் Lock செய்ய விரும்பும் Chat செல்லவும். அதில் ‘Profile Picture’ தட்டி ‘Chat Lock’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். Whatsapp Homepage சென்றால் நீங்கள் Lock செய்த அனைத்து Chat விவரங்களை பார்க்கமுடியும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link